சிதம்பரத்தில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கும் - விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்டம் மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான தில்லை.ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் ஜெமினி எம் .என். ராதா வரவேற்றார் மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் சிவசக்தி ராஜா மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி கே குமார்.
மாவட்ட செயலாளர்கள் நெல்சன் சம்பந்தம் பேன்சி எஸ். எஸ். நடராஜன் ஆர். ராஜ்குமார் சிதம்பரம் தில்லை செல்வி டாக்டர் மஞ்சுளா இந்திரா கவிதா மகளிர் அணியைச் சேர்ந்த ஜனகம் ராதா ருக்மணி மற்றும் மகளிர் அணியை சார்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அமிர்தவல்லி ராஜேஸ்வரி லட்சுமி ரேணுகா உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன் நிகழ்ச்சியின் முடிவில் நகர செயல் தலைவர் தில்லை கோ குமார் நன்றி கூறினார்
No comments:
Post a Comment