கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் (Get to Gether) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, காவல்துறையை சேர்ந்த குடும்பத்தாரின் பிள்ளைகளின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் வைத்து பரிசளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதின்பேரில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், புதுச்சத்திரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில், வடலூர் காவலர் குடியிருப்புகளில் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் நேரில் பங்கேற்று காவல் குடும்பத்தாருடன் இணைந்து அவர்களை ஊக்கப்படுத்தி, விளையாட்டு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களிலும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குடும்பத்தாருக்கு ஓட்டப்பந்தயம், கோல போட்டி, கயிறு இழுத்தல் போட்டி போன்ற சிறு சிறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது காவல் குடியிருப்புகளில் உள்ள குறைபாடுகள் காவல் அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்றனர். குடிநீர், தெருவிளக்கு பிரச்சனை அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனவும், குடியிருப்பு பகுதியை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், படிக்கும் மாணவர்கள் சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் காவலர் குடும்பத்தாரின் பிள்ளைகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியும் நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் மூலம் காவலர் குடியிருப்புகளில் உள்ள குடும்பத்தார் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் காணப்பட்டனர்.
No comments:
Post a Comment