கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த அரசகுழி கிராமத்தில் அமைந்துள்ள புனித உத்திரய அன்னை ஆலயம், இந்த ஆலயம் கட்டப்பட்டு 62 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஆண்டு தோறும் சமபந்தி நடைபெறும், இந்த நிலையில் 62ஆம் ஆண்டு பெருவிழாவையொட்டி ஆலயத்தில் கரி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கரி விருந்தில் அப்பகுதியில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். விழாவினை அரசகுழி புனித உத்திரய அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் கிறகோரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment