கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைவாணி ( 40) க/பெ நடராஜன், R.K நகர், சோழன் மாளிகை, கும்பகோணத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடம் கடனாக ரூபாய் 4 லட்சம் வாங்கியதில், கடனுக்கு வட்டி சேர்த்து ரூபாய் 9,50,000 திருப்பி கொடுத்த நிலையில் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு, கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக கொடுத்த புகார் சம்பந்தமாக புவனகிரி காவல் நிலையத்தில் கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை செய்துவருகின்றனர்
மற்றொரு வழக்கு விருத்தாச்சலம் புதுத்தெரு நாச்சியார்பேட்டையை சேர்ந்த வசந்தராணி வயது 36, க/பெ சுரேஷ், தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக கொடுத்த புகார் சம்பந்தமாக விருதாச்சலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரியகாப்பாங்குளம் கைக்களகுப்பம் தெற்கு தெருவை சேர்ந்த கமலஹாசன் த/பெ கொளஞ்சியப்பன் என்பவரின் 2 வயது மகளை பால்வாடிக்கு அனுப்பியபோது பக்கத்து வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகள் குழந்தையிடம் இருந்த 1 கிராம் பவுன் நகை, கொலுசை கழட்டிக்கொண்டு குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடுவீரப்பட்டு கீரப்பாளையத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்னை கலைச்செல்வன் என்பவர் காதலித்து தற்போது விலகிய நிலையில் இளம்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக கலைச்செல்வன் மிரட்டுவதாக கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோதண்டராமாபுரம் வெள்ளச்சிக்குப்பத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி வயது 36 க/பெ சிவகுருநாதன் என்பவரின் மாமனார் பெயரில் உள்ள இடத்தில் எனது கணவர் கணவர் வீடு கட்டியபோது தனது கொழுந்தனார் சிவானந்தராஜா தனது கணவரை அடித்துவிட்டதாகவும், தனது மாமனார் மற்றும் கொழுந்தனார் சேர்ந்து வீட்டை விற்றது சம்பந்தமாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment