வடலூர் காவல்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன் ,சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளியில் எக்காரணத்தைக் கொண்டும் மோதலில் ஈடுபடக்கூடாது எனவும் அப்படி ஈடுபட்டால் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார் மேலும் உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் கூறுகையில் படிக்கும் மாணவர்கள் எக்காரணத்திலும் குற்றச்சம்பவத்திலும் ஈடுபடக்கூடாது என்றும்
அப்படியே அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிப்பதோடு அரசு மட்டும் தனியார் துறைகளில் எந்த வேலைக்கும் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார் நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மெர்சி நிர்மலா அவர்கள் நன்றி தெரிவித்தார்.


No comments:
Post a Comment