பன்றியை பிடித்ததால் நியாயம் கேட்டு பேரூராட்சிக்கு திரண்ட மக்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 July 2022

பன்றியை பிடித்ததால் நியாயம் கேட்டு பேரூராட்சிக்கு திரண்ட மக்கள்

 


பன்றியை பிடித்ததால் நியாயம் கேட்டு பேரூராட்சிக்கு திரண்ட மக்கள்

 

குறிஞ்சிப்பாடி பகுதியில் குட்டக்கார தெருவை சேர்ந்த மக்கள் நாங்கள் 150 ஆண்டுகளாக  பன்றி வளர்ப்பு தொழிலை செய்து வருகிறோம் வாழ்வாதாரம் எங்களுக்கு இதுதான் இன்று பேரூராட்சி அதிகாரிகள் எங்களை அறியாமல் வெளிப்பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பன்றிகளை பிடித்து வெளியிடத்திற்கு கொண்டு சென்று விட்டனர் எங்களுக்கு தெரிவித்திருந்தால் சுற்றி திரிந்த பன்றிகளை நாங்களே பிடித்துக் கொண்டு போயிருப்போம் எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை அதிகாரிகள் இது சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றி வளர்க்கும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கூட்டம் போட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளையும் பாதிப்புகள் ஏற்படுத்துவதாக மாவட்ட அலுவலகத்திற்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கும் புகார்கள் வந்துள்ளது.


அதன் அடிப்படையில் காரணம் காண்பித்து எங்களை பன்றிகள் வளர்ப்பது என்றால் பட்டியில் அடைத்து வளர்க்கவும் வெளிப்பகுதியில் மேயவிடக்கூடாது என்றும் அப்படி மீறினால் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன்கருதி பன்றியை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டுவிடுவோம் என தெரிவித்தனர் என்றும் நாங்கள் அதற்கு எங்களுடைய வாழ்வாதாரம் இதுதான் எங்களுக்கு பட்டியில் அடைத்து பன்றி வளர்ப்பதற்கு  இடம் ஒதுக்கி தர கேட்டோம் அதிகாரிகளும் பரிசீலனை செய்கிறோம் என்று சொல்லி இருந்தனர் இது நாள் வரையில் எங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை வழக்கம்போல் நாங்கள் முடிந்தவரை பன்றியை வெளியில்விடாமல் வளர்த்து வந்தோம் எங்களின் கவனத்தை மீறி சில பன்றிகள் இன்று வெளியில் சுற்றி திரிந்த இருந்த நிலையில்  பேரூராட்சி நிர்வாகம் சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பண்றிகளை பிடித்து எங்கேயோ காட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக தெரிய வருகிறது ஆகையால் இன்று பிடித்து சென்ற பன்றிகளை எங்களிடம் ஒப்படைக்குமாறும் எங்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கி தருமாறும் பேரூராட்சி அலுவலகத்தை நியாயம் கேட்டு திரண்டு உள்ளோம் என பன்றி வளர்ப்பு செய்து வாழ்வாதாரம் நடத்தி வரும் குடும்பத்தினர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

*/