தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடலூர் கிளை சார்பில் விழிப்புணர்வு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடலூர் கிளையின் சார்பில் மனிதன் முதல் முதலாக நிலவில் கால் தடத்தை பதித்த ஜூலை 20 1969 கொண்டாடும் நினைவாக இன்று அதே நாளில் வடலூர் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பாக கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பிரச்சார கலை குழு ஒருங்கிணைப்பாளர் R.பலமுருகன் தலைமையிலான அறிவியல் பிரச்சார குழுவினர் பறை இசை முழங்க பாடல்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் சிறப்பு அழைப்பாளராக இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தாமோதரன் மாவட்ட தலைவர் பாலகுருநாதன் கலந்து கொண்டு இத்தினத்தின் சிறப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தனர் வடலூர் நகர பொருளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார் , செயற்குழு உறுப்பினர் தனக்கேசவமூர்த்தி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியின் நிறைவில் வடலூர் நகர செயலாளர் ஜெயப்பிரதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்

No comments:
Post a Comment