வாட்ஸ் அப் குழு அமைத்து இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவி மேற்கொண்டு வரும் காவலர்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

வாட்ஸ் அப் குழு அமைத்து இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவி மேற்கொண்டு வரும் காவலர்கள்


வாட்ஸ் அப் குழு அமைத்து இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவி மேற்கொண்டு வரும்   காவலர்கள்.


தமிழக காவல்துறையில் பயிற்சி பெறும் காவலர்கள் தங்களுக்குள் WhatsApp குழுவை உருவாக்கி அதன் மூலம் தங்களது பேட்ச் காவலர்கள் இறந்துவிட்டாலோ, விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உதவும் பொருட்டு WhatsApp குழுவின் மூலம் செய்தி பரப்பி உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பயிற்சி பெற்று கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த சிதம்பரம் சேந்திரகிள்ளை கிராமத்தை சேர்ந்த காவலர் திரு.பெரியசாமி என்பவர் 18-05-2022 தேதியன்று சிதம்பரம் வீனஸ் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்தபோது குடும்ப பிரச்சனையின் காரணமாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். மறைந்த திரு.பெரியசாமியின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 2017 பேட்ச் காவலர்கள் தங்களது பங்களிப்பு மூலம் ரூபாய் 3,38,100 தொகையை WhatsApp குழுவின் மூலம் வசூல் செய்து 17-07-2022 தேதியன்று திரு.பெரியசாமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அவர் நினைவாக வீட்டில் தென்னங்கன்று வைத்து திரு.பெரியசாமியின் பெற்றோர்களான திரு.முனுசாமி மற்றும் திருமதி.சாந்தி அவர்களிடம் ரூபாய் 3,38,100 பணத்தை வழங்கினார்கள். மேலும் வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 2017 பேட்ச் WhatsApp குழுவின் மூலம் உதவி செய்வதாக திரு.பெரியசாமியின் பெற்றோருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.

No comments:

Post a Comment

*/