புதிய பேருந்து நிலையத்தை கடலூர் பகுதியில் அமைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

புதிய பேருந்து நிலையத்தை கடலூர் பகுதியில் அமைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு


புதிய பேருந்து நிலையத்தை கடலூர் பகுதியில் அமைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு 


கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கடலூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களிடம் மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.


கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.


கடலூரில் தற்பொழுது உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளதால் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது பொது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் பேருந்து நிலையத்தை சுற்றி 200 கிராமங்கள் உள்ளன இந்த கிராம மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்லவும் வசதியாக பிரதான இடமாக உள்ளது.


தற்பொழுது உள்ள பேருந்து நிலையத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன அதற்கு கால அட்டவணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தற்பொழுது பேருந்து நிலையத்தை தொலைதூரத்தில் வைத்தால் அட்டவணையை மாற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்படும் மேலும் பேருந்து நிலையத்தை தொலைதூரத்தில் கொண்டு செல்வதால் அங்கு சென்று வர கூடுதலாக 40 நிமிடம் நேரம் செலவாகும். இன்றைய காலகட்டத்தில் டீசல் பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொள்ள வேண்டும். பேருந்துக்கு தேவையான உதிரி பாகங்கள் டயர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கடலூர் மாநகரப் பகுதியில் கிடைக்கின்றன எனவே பேருந்து நிலையத்தை இடம் மாற்றாமல் தற்பொழுது உள்ள இடத்திலேயே விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும். இவ்வாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/