கடலூர் முதுநகர் தூயதாவீது மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒளிம்பியாட் சின்னத்தை மணலால் உருவாக்கிய மாணவ மாணவிகள்.
தென்னிந்திய திருச்சபை சென்னைப்பேராயம் பேராயர் டாக்டர். ஜே.ஜார்ஜ் ஸ் டீபன் அவர்களின் ஆலோசனைப்படி சென்னையில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு கடலூர் துறைமுகம் தூயதாவீது மேல்நிலைப்பள்ளி யில் செஸ்ஒலிம்பியாட் சின்னத்தை பள்ளி தலைமையாசிரியை திருமதி.கங்காதேவி தலைமையில் ஓவிய ஆசிரியர் சாமுவேல்செல்லதுரை வழிக்காட்டுதலில் தூயதாவீதுப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல்12-ம் வகுப்பு மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை மணலைக்கொண்டு மணற்சிற்பம் உருவாக்கினார்கள் முன்னதாக பள்ளியில் சுமார் 350 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்ட செஸ் விளையாட்டு போட்டி நடைப்பெற்றது இறுதியில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கங்காதேவி பரிசுகளை வழங்கி பாராட்டினார் உடன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளி ஊழியர்கள் இருந்தனர்

No comments:
Post a Comment