சிதம்பரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது ,
சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு வேளைகளில் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டுல் ஈடுபட்டு வந்த இளைஞரை நகர போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் போல் நாராயண தெரு வடக்கு பிரதான சாலை வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேலைக ளில் கடைகளில் பூட்டுகள் உடைக்கப்ப ட்டு ரூ. ஒரு லட்சத்துக்கும் மேலான ரொக்கம், கைப்பேசி கள் உள்ளிட்டவை திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருடுபோன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இந்த திருட்டு சம்பவங்களில் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் ஏ (வயது 35) ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நகர போலீசார்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
No comments:
Post a Comment