கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய பட்டினம் கிராமத்தில் 100கும் மேற்பட்ட கோனார், வன்னியர், ஆசாரி வகுப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பயன்பாட்டில் இருந்து வந்த சுடுகாடு ஏரிக்கரை ஓரமாக இருப்பதால், அரசு பதிவேட்டில் சுடுகாட்டு கணக்கை தனியாக பதிய வேண்டும் என்றும், சுற்று சுவர், எரிகோட்டகை அமைத்து தர வேண்டும் என்று விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதில் பழையப்பட்டின் ஊராட்சி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் மோகன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் பழைய பட்டணம் ஊராட்சி மன்ற 2வது உறுப்பினர் விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment