குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயனற்ற முன்னாள் மாணவர் சசிகுமார் தற்போது அயல் நாட்டில் வேலை செய்து வருகிறார்.
தான் படித்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் பள்ளிக்கு ஏதேனும் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி ரூபாய் 10000 தொகையினை அவரது மனைவி ச.வெற்றிச்செல்வி அதே பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் அவரது மகள் ச.சமித்தா மற்றும் சசிகுமார்வுடைய சகோதரர் சேகர் உடன் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜா அவர்களிடம் ரூபாய் 10000 தொகையினை வழங்கினார்கள்.
உடன் குமராட்சி காவல்நிலைய ஆய்வாளர் திருமதி செ.அமுதா அவர்களும் மற்றும் வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் சமூக ஆர்வலர் திருமேனி ஆகியோர் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment