கடலூர் அண்ணா மேம்பாலத்தில் அதிமுக பேனரை கிழித்து எடுத்து சென்ற மாநகராட்சி வாகனத்தை சிறை பிடித்து அதிமுகவினர் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 July 2022

கடலூர் அண்ணா மேம்பாலத்தில் அதிமுக பேனரை கிழித்து எடுத்து சென்ற மாநகராட்சி வாகனத்தை சிறை பிடித்து அதிமுகவினர் போராட்டம்


கடலூர் அண்ணா மேம்பாலத்தில் அதிமுக பேனரை கிழித்து எடுத்து சென்ற மாநகராட்சி வாகனத்தை  சிறை பிடித்து அதிமுகவினர்  போராட்டம்



அதிமுக வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி  தேர்ந்தெடுத்தனர்.

 இதனையொட்டி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.


 மேலும் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க வினர் ஆங்காங்கே எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பேனர்கள் வைக்கப்பட்டன.


 இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், உழவர் சந்தை அருகே இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரை கிழித்து மாநகராட்சி வாகனங்களில் கொண்டு சென்றனர். 


தகவல் அறிந்த அதிமுகவினர் அண்ணா மேம்பாலத்தில் மாநகராட்சி வாகனத்தில் குறுக்கே அதிமுகவின் வாகனத்தை விட்டு மரித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் வி.கந்தன், வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு  கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று அதிமுக வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/