விருத்தாசலத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலனை, காவல் நிலையம் வரவழைத்து, திருமணம் செய்து கொண்ட செவிலியர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

விருத்தாசலத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலனை, காவல் நிலையம் வரவழைத்து, திருமணம் செய்து கொண்ட செவிலியர்


விருத்தாசலத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலனை,  காவல் நிலையம் வரவழைத்து, திருமணம் செய்து கொண்ட செவிலியருக்கு மலர் தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த உறவினர்கள்.


கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகள் தவச்செல்வி.  21 வயதுடைய இவர்,  கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் 25 வயதுடைய விஜய்  பாண்டிச்சேரியில் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இன்னிலையில் தவச்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலன் விஜயிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய் மீது புகார் அளித்தார். 


புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால், காவல் நிலையம் அருகே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் திருக்கோயிலில், காதல் ஜோடிகள் இருவரும் ஒருவருக்கொருவர்,  மாலை மாற்றிக் கொண்டு, தவசெல்வியின் கழுத்தில் விஜய் தாலி கட்டினார். அப்போது உறவினர்கள் மணமக்களுக்கு மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர்.  பின்னர் மணமக்கள் இருவரையும் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

*/