கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார் .நகரத் தலைவர் தாடி முருகன், ஒன்றிய தலைவர் ராமநாதன், கவுரவ தலைவர் காசிநாதன், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை நிலையை செயலாளர் கண்ணன் ,மதியுரைகுழு செயலாளர் பாலகுருசாமி, மாவட்ட செயலாளர் சேரலாதன், மாவட்டத் தலைவர் ஆளவந்தார் ,மாநில ஊடகப்பிரிவு தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை நிலையை பேச்சாளர் மாரிமுத்து மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டங்களாகவே இருக்கின்றது என்.எல்.சியில் நிலம் கொடுத்த மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் வகையில் உள்ளது அவர்களுக்கு அங்கே நிரந்தர வேலை வழங்க மறுப்பது மேலும் வடநாட்டு பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தமிழக மக்களிடையே காட்டும் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது என்றும் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வடநாட்டு பணியாளர்கள் நிறைந்துவிட்டனர் இந்நிலை தொடர்ந்து தொடருமானால் தமிழக மக்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் என மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் முத்து, வேல்முருகன், சின்னதுரை, ரவிக்கண்ணன் ,ஊடகப்பிரிவு பாண்டியன் ,விஜய் ,ஐயப்பன், மணிகண்டன் ,தேவா ,சத்தியசீலன் ,சபரி உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் . முடிவில் நகர பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெருமுனை கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்றது

No comments:
Post a Comment