விருத்தாச்சலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைய உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

விருத்தாச்சலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைய உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைய உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த எறுமனூர் ஊராட்சியில்  தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 10.8 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் அரசு மீட்டது. இது நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்துமாறு அரசு வலியுறுத்தியது. 


அதன்பேரில் அந்த நிலத்தில் பண்ணை குட்டை அமைத்தல், கால்நடை தீவனம் உற்பத்தி செய்தல், மருத்துவ பயன்பாட்டிற்கான தாவரங்களை வளர்த்தல், காய் கனி மரங்கள் வளர்த்தல் ஆகிய பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் இப்பணிகள் நடைபெற உள்ள இடத்தை இன்று ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வின்போது விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், வட்டாட்சியர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா, வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் தண்டபாணி, எருமனூர் ஊராட்சித் தலைவர் சௌமியா வீரமணி, பணி மேற்பார்வையாளர் விஜயகுமார், ஊராட்சி செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு தினமான ஜூலை 18ம் தேதி இந்த நிலத்தில் 1200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியின் முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் புதிய மரக்கன்று ஒன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

*/