கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் ஒரே கல்லூரியான அரசு பீங்கான் தொழிநுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கல்லூரியில் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருவதால், 2022- 23 ஆம் ஆண்டு சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளதாகவும், கல்லூரி சேர்க்கைக்கான விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வருவதால் விருத்தாசலத்தின் அடையாள சின்னமான செராமிக் கல்லூரியில் மீண்டும் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்த கோரி இந்திய வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் மாநில குழு உறுப்பினர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட்ட செயலாளர் பரமசிவம் முன்னிலை வைகித்தார். இந்திய மாணவர் சங்கம் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் குமரவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், இந்திய மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் செம்மலர், இந்திய மாணவர் சங்கம் வட்டத் தலைவர் சிவானந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட்ட பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment