கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையம் இயங்கி வருகிறது இங்கு காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் புதுப்பித்தல் புதிதாக எடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கு இங்குதான் வரவேண்டும் இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக ஆதார் சேவை மையம் சரிவர இயங்கவில்லை மேலும் அங்கு ஏற்கனவே இரண்டு ஆதார் போட்டோ எடுக்கும் பணி நடைபெற்று வந்தது தற்பொழுது ஒன்று மட்டும் இயங்கி வருகிறது.

அதுவும் கடந்த 20 நாட்களாக சரிவர இயங்கவில்லை மேலும் இன்று காலை பொதுமக்கள் வழக்கம்போல் ஆதார் இ சேவை மையத்திற்கு வருகை புரிந்தனர் அப்பொழுது 10 மணி ஆகியும் ஆதார் சேவை மையம் திறக்காததால் திடீரென பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர் தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் காவல்துறை ஆய்வாளர் ஏழுமலை மற்றும் உதவி ஆய்வாளர் மாணிக்க ராஜா தலைமையில் காவல்துறை அங்கு வந்து மற்றும் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் தலைமையில் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்தனர் அப்பொழுது மனுவாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
செய்தியாளர் கே பாலமுருகன்

No comments:
Post a Comment