கடலூர் மாவட்டம், புவனகிரியில் உள்ள அரசு தாலுக்கா மருத்துவமனையில் அதிமுக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட வளாகத்துக்கு முன்பு 6 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்க நேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.
பேரூராட்சி மன்ற 11 வது வார்டு அதிமுக உறுப்பினர் ரெங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் முத்துக்குமரன் பிசியோதெரபிஸ்ட்ரா மருத்துவர் ஆனந்த் சித்த மருத்துவர் ஆர்த்தி மருந்தாளர் ராஜகோபால் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் செஞ்சிலட்சுமி இளங்கோவன் மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி அம்மா பேரவை மனோகர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சந்திரன் பாசறை நகர செயலாளர் சக்தி தாசன் வார்டு செயலாளர் பார்த்திபன் வார்டு துணை செயலாளர் சங்கர் மாவட்ட பிரதிநிதி குமார் பேச்சாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment