கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு பெயர் பெற்ற திருநாள் விழா நடைபெற்றது இந்நிகழ்வை அப்பள்ளியின் முதல் பெண் தலைமை ஆசிரியை திருமதி கங்கா தேவி தலைமையேற்று நடத்தினார் இதில் பள்ளியினுடைய தாளாளர் ஞானக்கண் செல்லப்பா அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சிறப்புரையாற்றினார் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் திரு கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசுகளை வழங்கினார்
மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பள்ளி வளாகத்தில் காமராசர் உருவத்தில் மணல் சிற்பம் மற்றும் தமிழ்நாடு முத்திரை கொண்ட மணற்சிற்பம் பள்ளி ஆசிரியர் ஆர்.சாமுவேல் செல்லப்பா தலைமையில் மாணவர்களால் வரையப்பட்டு மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது
மாணவர்கள் காமராசர் பாடலை பாடி அதற்கேற்ப நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினர்
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்



No comments:
Post a Comment