காடாம்புலியூரில் கால்நடை மருந்தக கட்டடத்தை தொழிலாளர் மட்டும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 July 2022

காடாம்புலியூரில் கால்நடை மருந்தக கட்டடத்தை தொழிலாளர் மட்டும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


காடாம்புலியூரில் கால்நடை மருந்தக கட்டடத்தை தொழிலாளர் மட்டும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் காடாம்புலியூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை  தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் தலைமையேற்று திறந்து வைத்தார்.இவ்விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்  சபா. ராஜேந்திரன்  வாழ்த்துரையுடன் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர்  சபா .பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.


கடலூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர். மோகன் குமார் வரவேற்புரை ஆற்றினார். கடலூர்மண்டல இணை இயக்குனர் டாக்டர் .குபேந்திரன். துணை இயக்குனர் டாக்டர் பொன்னம்பலம் கலந்து கொண்டனர். காடாம்புலியூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். புவனேஸ்வரி நன்றி கூறினார்.இவ்விழாவில் கால்நடை உதவி மருத்துவர்கள்  வித்யா சங்கர்,  ராஜா,  ஜெய்சங்கர் ,அருட்செல்வி,  தமிழ்ச்செல்வி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக டாக்டர் ஸ்டாலின், டாக்டர் மதன், டாக்டர் நரேஷ் ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

*/