சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்.நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 July 2022

சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்.நலத்திட்ட உதவிகள்

சிதம்பரத்தில் காங்கிரஸ்  சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது



மறைந்த பெருந்தலைவர் காமராஜர் 120-வதுபிறந்த நாளையொட்டி  சிதம்பரத்தில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 500 பேருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு,  அன்னதானம் - நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.


சிதம்பரம் வடக்கு வீதி மாடன் ஸ்கூல் மற்றும் அம்பலத்தாடி  பள்ளி 500 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்கப்பட்டது.


சிதம்பரம்  கீழவீதியில்  நடைபெற்ற காமராஜர் 120-வது பிறந்த நாள் விழாவிற்கு நகர்மன்ற உறுப்பினர் தில்லை.ஆர்.மக்கின் தலைமை தாங்கினார்.


கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜெமினி எம்.என் .ராதா வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்டிஐ துறை மாநில பொதுச் செயலாளரும் மாவட்ட தலைவர் மான பி  ஸ்டிபன் முத்துப்பாண்டி வட்டாரத் தலைவர்கள் சுந்தர்ராஜன், செழியன், பொதுக்குழு உறுப்பினர்  வெங்கடேசன்,  மாநில ஊடகப்பிரிவு பொது செயலாளர் சிவசக்தி ராஜா, மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக  கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் கலந்து கொண்டு காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கினார்.  மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன்  500 பேருக்கு  தென்னங்கன்றுகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பரசன் இனிப்பு வழங்கினார். இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விசுவநாதன், கிள்ளை சத்தியமூர்த்தி,  சண்முகசுந்தரம்,  தில்லை.கோ. குமார், குமராட்சி ரங்கநாதன், பகத்சிங், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜஹான், மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், ஆட்டோ டி .குமார், சம்பந்தம் பேன்சி எஸ். எஸ். நடராஜன்,  நெல்சன், மிஷ்கின்,  சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையது, மாவட்ட செயலாளர்கள் தில்லை செல்வி, டாக்டர் மஞ்சுளா, இந்திரா, மகளிர் அணியைச் சேர்ந்த  ஜனகம்,  ராதா, வேளாங்கன்னி, ருக்மணி மற்றும் பொன் மாதவன், நாராயணசாமி, ஷர்மா,  ராஜ்குமார், தில்லை ராஜா, ஆனந்தன், பாலகுரு, சசி, பக்கிரிசாமி,  வீரமணி, தணிகைவேல், சி.சேரன், செல்வராஜ், பி.கந்தசாமி, ராஜா மணிவண்ணன், ரவிச்சந்திரன், சுந்தரேசன், திலீப், சஞ்சய், வீரக்குமார், பக்கிரிசாமி, ரவிச்சந்திரன், அருண் செந்தில், கந்தசாமி ராஜா,

கே. நடராஜன், தில்லி ராஜா, வேல்குமார், இதயதுல்லா, பி.ஜெயச்சந்திரன், சுந்தரராஜன், குருமூர்த்தி,  மணி, ரூபன், அருணகிரி, பாலாஜி, பிரவீன், அரவிந்தன், ரஞ்சித் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


500 பேருக்கு மரக்கன்றுகள் உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் செய்திருந்தார்


மாடர்ன் பள்ளி, அமலத்தாடி பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பிஸ்கட், பேனா, பென்சில், இனிப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கின்  செய்திருந்தார்.


வடக்கு வீதியில் மாடன் பள்ளி அருகே 200 பேருக்கு சில்வர் வாலி, உணவு, இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை மகளிர் அணி டாக்டர் மஞ்சுளா செய்திருந்தார்.



இந் நிகழ்ச்சியின் முடிவில்  மாவட்ட பொது செயலாளர் ஆர்.வி .சின்ராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/