வடலூர் அடுத்த மண்ணேரி கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

வடலூர் அடுத்த மண்ணேரி கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை.


வடலூர் அடுத்த மண்ணேரி கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை.வடலூர் அடுத்த வருவாய் மண்ணேரி கரை பகுதியில் வ நூற்றிற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக  வசித்து வருகின்றனர் இப்பகுதி நீர்நிலை புறம்போக்கு இடம் என்பதால் வருவாய் துறையினர் மூலம் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று இடம் தருவதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குறிஞ்சிப்பாடி பாடி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினரும் இணைந்து மண்ணேரி ஏரிக்கரையில் நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டியுள்ள விடுகளை அகற்ற அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் வடலூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் மாற்றியிடம் வழங்கிய பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் கோரிக்கையை ஏற்ற வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment