காட்டுமன்னார்கோவில் வீராணம் டெல்டா உற்பத்தி நிறுவனத்துடன் ரூபாய் 7,24,500 மதிப்பை உளுந்தை பெற்று கொண்டு நுாதன முறையில் மோசடி செய்த நிலாபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 July 2022

காட்டுமன்னார்கோவில் வீராணம் டெல்டா உற்பத்தி நிறுவனத்துடன் ரூபாய் 7,24,500 மதிப்பை உளுந்தை பெற்று கொண்டு நுாதன முறையில் மோசடி செய்த நிலாபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


காட்டுமன்னார்கோவில் கீழ்கொள்ளிடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் ரூபாய்7,24,500 மதிப்பிலான உளுந்து பயிரை வாங்கிகொண்டு பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது நிலாபர் வயது 38 என்பவர் மாவட்ட குற்றபிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் அவர்களிடம் கீழ்கொள்ளிடத்தை சேர்ந்த சரவணன், வயது 50, இவர் காட்டுமன்னார்கோயில் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசனிடம் புகார் ஒன்றைக்கொடுத்தார்ர  புகாரில் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் காட்டுமன்னார்கோயில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு வணிகம் செய்யும் பொருட்கள் வாங்க அரசு மானியம் 20 லட்சம் மார்ச் மாதம் 2022 ல் பெறப்பட்டதாகவும், அதன்பேரில் சுற்றியுள்ள விசாயிகளிடமிருந்து கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் உளுந்து 10350 கிலோ வாங்கியதாகவும், அதனை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடிவு செய்து மணிவண்ணன் என்பவர் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்S PICES PLAZA என்ற பெயரில் குடோன் வைத்து வியாபாரம் செய்து வந்த நிலாபர் வயது 38 க/ பெ இப்ராஹிம் என்பவரிடம் கடந்த 02.05.2022 ஆம் தேதி கிலோ ரூ. 70 க்கு விலைபேசி மொத்த ரூபாய் 7,24,500 SPICES PLAZA நிறுவனத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் உளுந்தை வாங்கி கொண்ட மேற்படி நிலாபர் அதற்கான பணத்தை தராமல் காலம்  கடத்தி ஏமாற்றி வருவதாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு புகாரின்பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண் 33/2022 பிரிவு 406, 420 IPCன்படி 25.07.2022 ஆம் தேதி வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌அவர்களின் உத்தரவுப்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல்படி காவல் உதவி ஆய்வாளர் . ஆனந்தன் போலீஸ் பார்ட்டி சகிதம் புறப்பட்டு கோயம்புத்தூர், மரக்கடை, திருமால் வீதி, 13/25 என்ற முகவரியில் உள்ள இவ்வழக்கின் குற்றவாளி நிலாபர் என்பவரின் வீட்டின் முன்பு எதிரி நிலாபர் என்பவரை 26.07.2022 ஆம் தேதி காலை 06.30 மணிக்கு குற்ற காரணம் கூறி பெண் தலைமை காவலர் சுமதி உதவியுடன் கைது செய்து பாதுகாப்பாக கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தான் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், அதில் தனக்கு போதுமான வருமானம் கிடைக்காததால் விவசாய பொருட்கள் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என நினைத்து, SPICES PLAZA என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆன்லைனில் நித்ரா ஆப் மற்றும் இன்னும் இதர ஆப் மூலம் கண்டறிந்து அதில் குறிப்பிட்டுள்ள விவசாய பொருட்களை குறைவான விலைக்கு பேசி அவர்களிடம் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்து தொழில் செய்து வந்ததாகவும், 


இந்நிலையில் நித்ரா ஆப் மூலம் சேலம் மணிவண்ணன்என்பவர் கருப்பு உளுந்து விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்திருந்ததை பார்த்து அவரிடம் 10350 கிலோ உளுந்தை வாங்கிகொண்டு அதை மொத்தமாக வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு அதன் மூலம் பெற்ற பணத்தை தான் ஜாலியாக சுற்றுலா தளங்களுக்கு சென்று பணத்தை செலவழித்து விட்டதாவும், தற்போது பணம் ஏதும் தன்னிடம் இல்லை என கூறினார்.


நித்ரா ஆப் மூலம் காட்டுமன்னார்கோவில் வீராணம் டெல்டா உற்பத்தி நிறுவனத்துடன் ரூபாய் 7,24,500 மதிப்பை உளுந்தை பெற்று கொண்டு நுாதன முறையில் மோசடி செய்த நிலாபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment