மங்களம்பேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்களம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அமைந்துள்ளது. இங்கு கடந்த வைகாசி மாதம் 14ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் அம்மன் வீதியுலா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஆயிரத்தற்ரக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவினை திரௌபதி அம்மன் ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment