விருத்தாச்சலத்திவ் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர் இதில் 60 பள்ளிகளைச் சேர்ந்த 420 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது. மேலும் வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் முகப்பு கண்ணாடியில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். தீயணைப்பு கருவியை கொண்டு அதை செயல்படுத்தும் முறையை செய்முறை மூலம் விளக்கப்பட்டது.
இந்த ஆய்வில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment