புவனகிரி அருகே வெட்காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ வைபவம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

புவனகிரி அருகே வெட்காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ வைபவம்.

வெட்காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ வைபவம். பார்வதி கோலத்தில் கையில் சூலத்தை ஏந்தியபடி காட்சி அளித்த வெட்காளியம்மன். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தலைக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன்  ஆலயத்தில்  ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு ஊஞ்சலுக்கு அம்பாள்  ஏற்றப்பட்டால் ஆடி அமாவாசை அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து வெக்காளியம்மன் பார்வதி கோலத்தில் சூலத்தை கையில் ஏந்தியபடி ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு.  அம்மனை போற்றும் விதமாக பல்வேறு அம்மன் பாடல்கள்  ஆரம்பித்த ஊஞ்சல் உற்சவம் பம்பை, மேளம் தாளங்கள் முழங்க தாலாட்டு பாடல்களுடன் விடிய விடிய நடைபெற்றது. இதனைக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஊஞ்சல் உற்சவத்தை கண்டு களித்து வெக்காளியம்மனை வணங்கி சென்றனர்.

No comments:

Post a Comment