பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் வடலூர் புனித ஜான் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி 95.67% தேர்ச்சி
கடலூர் மாவட்டம், வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் புனித ஜான் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது உள்ளது இங்கு மொத்தம் 285 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவி ஜெர்லின் மோனிஷா 418/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார் பள்ளியில் பயின்று வரும் நரிக்குறவர் இன மாணவிகளான மச்சக்கன்னி, கவிதா, தெய்வானை ஆகிய மூன்று மாணவிகள் முழுமையான தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 22 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளில் மொத்தம் 45 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் M.மெல்வின் ஆகாஷ் அவர்கள் 72 /100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் வடலூரில் உள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் புனித ஜான் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியின் மாணவரான மெல்வின் ஆகாஷ் மற்றும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது சிறப்பம்சமாகும்
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 95.6% தேர்ச்சி சதவீதத்தை அடைய முழு முயற்சி மேற்கொண்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கும் புனித ஜான் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் M. லூர்து ஜெயசீலன் அவர்கள் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்
No comments:
Post a Comment