விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 July 2022

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம். 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. 


இந்நிலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன்னிருந்த தேரடியில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறநிலையத்துறை அவகாசம் கொடுத்திருந்தது.


அவகாசம் முடிய இருக்கும் நிலையில் இன்று ஆக்கிரமிப்பு செய்தவர்கள்  தாங்களாகவே முன்வந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். 


அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில்  விருத்தகிரீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மாலா முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டிடங்களை சுத்தியல் மற்றும் சுவர் உடைக்கும் இயந்திரங்களை கொண்டு  சுவற்றை உடைத்து ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் அகற்றினர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. உடன் மேலாளர் பார்த்தசாரதி.

No comments:

Post a Comment

*/