பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டம் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடஹரிராஜபுரம் ஊராட்சியில் பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பயனாளிகள் பாலசுந்தரமூர்த்தி , லட்சுமணன் ஆகியோர் வீடுகளை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு தெருவில் வசிக்கும் மக்கள் தங்கள் தெருவுக்கு சாலை வசதி மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் அவதி அடைவதாக கலெக்டரிடம் முறையிட்டனர்.
அதன் பேரில் புளியந் தோப்புத் தெருவை பார்வையிட்ட கலெக்டர் உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர கீரப்பாளையம் ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் .இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,தாசில்தார் ஹரிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் ,ராமச்சந்திரன் ,
வடஹரிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி செல்வமணிகண்டன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், ஊராட்சி செயலர் நரசிம்மபாரதி, வார்டு உறுப்பினர்கள் லட்சுமணன், சுமதி மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment