தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமராட்சி ஒன்றிய 23 வது மாநாடு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமராட்சி ஒன்றிய 23 வது மாநாடு


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமராட்சி ஒன்றிய 23 வது மாநாடு நடைபெற்றது



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 23 வது மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார்ஒன்றிய பொருளாளர் மணிவண்ணன் தோழர் கலா ராணி முன்னிலை வகித்தனர்.

விவசாய சங்க முன்னணி தோழர் ஆசிரியர் கண்ணன் கொடியேற்றினார். விவசாய சங்கம் தோழர் புஷ்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்

வேலை அறிக்கையை ஒன்றே செயலாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்

துவக்க உரையை மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்

மாநாட்டின் நிறைவுறை விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கி கோரிக்கைகளை வாசித்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

புதிய நிர்வாகிகளாக முனுசாமி ஒன்றிய தலைவராகவும் மூர்த்தி ஒன்றிய செயலாளராகவும் புஷ்பராஜ் ஒன்றிய பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர் மேலும் 15 பேர் ஒன்றிய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்

தீர்மானமாக விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை வழங்க வேண்டும்

வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுப்பொருள்கள் பாறை மண்வெட்டி தட்டு தலையிட சாமான்கள் சிறுகுறு விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்

குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்குடி டு ஜெயங்கொண்ட பட்டினம் வரை கொள்ளிடக்கரை சாலையை உடனே தார் சாலை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும்

வெள்ளையங்கால் ஓடையில் லால்பேட்டையில் கழிவு நீர் கலப்பையை தடுத்து நிறுத்த வேண்டும்

குமராட்சி ஒன்றியத்தில் கீழ வன்னியூர் பகுதியில் புதியதாக அமைய உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியை உடனே துவங்க வேண்டும் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் விவசாய சங்கத் தொடர் ராஜேந்திரன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/