கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மா.பொடையூர் ஜே.எஸ்.ஏ. கல்லூரியில் நேரு யுவ கேந்திரா இளையோர் நலம் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பாலின பாகுபாடுக்கு எதிராக இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் லக்ஷ்மணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் வளர இளம் பெண்கள் அனைவரும் ஆரோக்கியமான சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்றும், மேலும் பெண்களுக்கான கருத்து சுதந்திரம் குறித்தும், பாலியல் வன்முறை மற்றும் கருக்கலைப்பு குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நேரு யுவ கேந்திராவின் நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன், ஏ.கே. சமூகநல அறக்கட்டளை நிறுவன தலைவர் வழக்கறிஞர் அகிலன், கல்லூரி உதவி பேராசிரியர் அனிதா, விஜய்ஆனந்த் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment