தனியார் நிதி நிறுவனங்களால் சுய உதவிக் குழு பெண்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பேட்டி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

தனியார் நிதி நிறுவனங்களால் சுய உதவிக் குழு பெண்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பேட்டி


தனியார் நிதி நிறுவனங்களால் சுய உதவிக் குழு பெண்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பேட்டி

----------------------------

மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர்களின் மரணத்தை தூண்டும் தனியார் நிதி நிறுவனங்கள்


வட்டி சம்பாதிப்பதற்காக கூவி கூவி கடன் கொடுத்துவிட்டு அதன்பிறகு பெண்களின் குறவளையை நெறிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவன ஊழியர்கள் போல் ஆடை அணிந்து அடியாள் போல் நடந்து கொண்டு தவனை கட்ட சொல்லி பெண்களை மிரட்டும் அவல நிலை


பணம் கட்ட முடியவில்லை என்றால் செத்துப்  போங்கள் உங்கள் பணத்தை நாங்கள் இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்து கொள்கிறோம் எனக் கூறும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்


நாங்கள் செத்துப் போய்விட்டால் எங்கள் பிள்ளைகளை யார் பார்ப்பது என்று கண்ணீர்  விட்டு அழும் மகளிர்கள்


தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு மூலம் பெண்கள் கடன் வாங்கிய தவணைத் தொகையை கட்ட முடியாத பெண்களில் வீட்டில் அமர்ந்து கொண்டு மாணபங்கப்படுத்தும் நிதி நிறுவன ஊழியர்கள்*


தவணை கட்டினால் தான் வீட்டை விட்டுப் போவேன் எனக் கூறி காலையிலிருந்து  இரவு வரை வீட்டிலேயே அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசும் நிதி நிறுவன ஊழியர்கள்


ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு டீம் ஆக படை எடுத்து வந்து மகளிர் சுயஉதவி குழு பெண்களை மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்*


தமிழக அரசும் நீதிமன்றமும் தலையிட்டு தனியார் நிதி நிறுவனகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வருவார்களா?????


தமிழக அரசு வங்கிகள் மூலம் சுய உதவி குழுவிற்கு தங்கு தடை இன்றி மகளிர் முன்னேற்றத்திற்கு கடன் கொடுத்தால்  தனியார் நிதி நிறுவனத்தை தேடி நாங்கள் போக மாட்டோம்.


சுய உதவி குழு மூலம் லோன் வாங்க வங்கிகள் பல்வேறு கண்டிஷனை போடுவதால்  லோன்கள் கிடைக்காமல் போகிறது எனக் கூறும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்


நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தி வரும் பெண்களின் மனதில் இருந்து வரும் வார்த்தையின் மரண ஓலங்கள்

            

குறிஞ்சிப்பாடி தாலுகா நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பைச் சேர்ந்த பகுதியில் வாழும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒரு குழுவாக சேர்ந்து கடன் பெற்றுவந்த நிலையில் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி வருமானம் இழந்து ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் தற்போது தவணைத் தொகைகள் நிறுவனம் குறிப்பிட்ட மாதத்தின் தேதிக்குள் கட்ட முடியாத நிலை ஏற்படும் பொழுது அதை ஏற்றுக் கொண்டு செல்லாமல் நிதி நிறுவன ஊழியர்கள் அடியாள் போல் நடந்து கொண்டு பெண்களின் வீடுகளில் காலையிலிருந்து இரவு வரை உட்கார்ந்து கொண்டு தவணை கட்டினால் தான் வீட்டை விட்டு செல்வோம் எனவும் உங்களால் தவணை கட்ட முடியவில்லை என்றால் செத்துப் போங்கள் நீங்கள் கட்ட வேண்டிய தவணையை நாங்கள் இன்சூரன்ஸ் மூலம் கிளைம் பண்ணிக் கொள்கிறோம் எனக்கூறி தகாத வார்த்தைகளை பேசியும் மன உளைச்சல்களை ஏற்படுத்தியும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு 5, 10, எண்ணிக்கைகள் கொண்ட புதிய புதிய நபராக சேர்ந்து குரூப்பாக வந்து தவனை கட்ட வேண்டியவர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளை கூறி பேசி வரும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் இந்நிலைத் தொடர்ந்தால் நாங்கள் விஷத்தை வாங்கியோ அல்லது வீட்டில் தூக்கிலிட்டோ  தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை எங்களுக்கு என கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

*/