சிதம்பரம் நடராஜர் கோயில் ஆணி திருமஞ்சனம் திருவிழாவில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவில் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தேரை வடம்பிடித்து இழுத்து சிறப்பு அர்சனை செய்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27.06.2022 கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவான இன்று விநாயகர் முருகர் நடராஜர் சிவகாமசுந்தரி சண்டிகேஸ்வரர் 5 தேர்கள் காலை கீழ வீதியில் தொடங்கி நான்கு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலவீதி காய்கறி மார்க்கெட் அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், குமராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி.பூங்குழலி பாண்டியன், சிதம்பரம் நகர கழக துணைச் செயலாளர் அரிசக்திவேல் ஆகியோர் அர்ச்சனை செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், இணைச் செயலாளர் ரங்கம்மாள்,துணை செயலாளர்கள் செல்வம், தேன்மொழி,மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர். சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை.கோபி, ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், சுந்தரமூர்த்தி, அசோகன், கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் கருணா, திருநாரையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி, ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ரவிச்சந்திரன் மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர் ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், தில்லை சேகர், தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் முருகையன், வழக்கறிஞர் கீதா, புவனகிரி இளைஞரணி ஒன்றிய செயலாளர் செழியன், நிர்வாகிகள் வீரமணி, கருப்பு ராஜா, மருதவாணன்,
தீன.வெங்கடேசன், பு.தா.செங்குட்டுவன், எள்ளேரி பிரபு, குமராட்சி மாரியப்பன்,
மணிராஜ், சந்தோஷ், சரவணன், மகளிரணி செயலாளர் பானு, வச்சலா, மீனா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment