விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை


விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து  தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.               


கடந்த 20.7.2017 ஆம் தேதி காடாம்புலியூர் காவல் நிலையம் சரகத்தில் திவ்யா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா (எ) ஜெயசித்ரா க/பெ மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வந்தநிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தடயத்தை கைப்பற்றுவதற்காக கைது செய்யப்பட்ட சித்ராவை  முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய சரகம் கீழ்காங்கேயங்குப்பம் முந்திரிதோப்பிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி சித்ரா (எ) ஜெயசித்ரா போலீசாரை தள்ளிவிட்டு அருகில் இருந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 


இவ்வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து,கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சித்ரா (எ) ஜெயசித்ரா என்பவரின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 3 லட்சம் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததின்பேரில் (தமிழக அரசாணை 701 உள் (காவல் XII ) துறை) -ன் படி இன்று 26.07.2022 ஆம் தேதி கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. சக்திகணேசன்  அவர்கள், கிணற்றில் குதித்து இறந்து போன சித்ராவின் தாயார் ஜெயவள்ளியிடம் 3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் வழங்கினார்.

No comments:

Post a Comment