கடலூரில் தமிழக பாரத பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக உண்ணாவிரதம்.
கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் உண்ணாவிர போராட்டம் கடலூர் மஞ்சகுப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறிய வாக்குறுதி என்ன ஆச்சு ,கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 100 குறைப்பு என வாக்குறுதி என்ன ஆச்சு, பூரண மதுவிலக்கு என்ன ஆச்சு, தமிழகத்தில் தலை விரித்தாடும் கொலை கொள்ளை கற்பழிப்பை தடுக்கும் நடவடிக்கை என்ன ஆச்சு, மாணவ மாணவிகள் கல்வி கடன் ரத்து என்ன ஆச்சு, மணல் கொள்கையை தடுப்போம் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு ,குடும்பத் தலைவியின் உரிமைத்தொகை மாதம் ரூபாய் ஆயிரம் என்ன ஆச்சு ,தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு ,இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்ன ஆச்சு, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கடலூர் மக்களவைத் கிழக்குமாவட்டத் தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார் துணைதலைவர்விஜயரங்கன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி .ஏ .டி. கலிவரதன் துவக்க உரையாற்றினார்.
இந்த உண்ணாவிரத த்தில் ஓபிசி அணி மாநில தலைவர் ஆர். எம். சாய்சுரேஷ் கண்டன உரையாற்றினார். எழிலரசன், சுகுமாரன் ,சரவண, சுந்தரம் ,டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ,அக்னி கிருஷ்ணமூர்த்தி, ஜீவா ,வினோத்குமார் ,சுரேஷ் ,பிச்சைபிள்ளை ,ஜெனித், ஆர். மேகநாதன் ,மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட செயலாளர் மண்டல தலைவர்கள் மாவட்ட அணி தலைவர்கள் மாவட்ட பிரிவு தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கடலூர் நகரத் தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.



No comments:
Post a Comment