கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர் மற்றும் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் மூலம் 12 பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்த கடலூர் மாவட்ட காவல்துறையினர்.
கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதிரான குற்றங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குபதிவு செய்து குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம் எதிரிகளுக்கு தண்டனை பெற்றுதர வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததின்பேரில் கடந்த 6 மாதத்தில் 12 போக்சோ (POCSO)குற்ற எதிரிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுதரப்பட்டுள்ளது.
கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சரகம் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்தகுமார் வயது 30 த/பெ தனுஷ், கோதண்டராமாபுரம் என்பவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தமிழ்செல்வன் வயது 22 த/பெ பூங்காவனம் தொண்டமாநத்தம் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 5000அபராதமும் விதிக்கப்பட்டது.
விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சரகம் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமார் வயது 33 த/பெ ராமசாமி, காமராஜ் நகர் வைய்யங்குடி, திட்டகுடி எனபவருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. 18 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் வயது 22 த/பெ ஆறுமுகம் ரைஸ்மில் தெரு, பாலகொள்ளை எனபவருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது.
நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம் சரகம் 11 வயது சிறுமியை பாலியல்வன் புணர்ச்சி செய்த வழக்கில் நயன்பீ நஹகர் வயது 32 த/பெ பவுல்கிஷ்தா, 90/C குடியிருப்பு நெய்வேலி எனபவருக்கு 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டது. 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூரியமூர்த்தி வயது 23 த/பெ சுந்தரமூர்த்தி பெரியகண்ணாடி எனபவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 4000 அபராதமும் விதிக்கப்பட்டது. 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரி சுதாகரன் த/பெ சக்கரவர்த்தி 58. ATR தெரு, நெய்வேலி என்பவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் சரகம் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் சேகர் த/பெ கண்ணையன், பழைய காலனி, சன்னியாசிப்பேட்டை எனபவருக்கு 2 வருடம் கடுங்காவல் தண்டனையும், ருபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் எதிரி கோபிநாதன் வயது 28 த / பெ ராதாகிருஷ்ணன் பெரியார்நகர் எனபவருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ருபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் எதிரி சக்திவேல் வயது 50 த/பெ ராஜாங்கம் வண்டரசன்குப்பம் எனபவருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் எதிரி வாழ்முனி வயது 19 த/பெ குமார் கம்பன்நகர், வாழப்பட்டு, எனபவருக்கு 3 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை காவல் நிலையம் சரகம் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் எதிரி தேசிங்கு வயது 60 த/பெ பட்டுராஜா ஆண்டிப்பாளையம், பரங்கிப்பேட்டை எனபவருக்கு 22 வருடம் கடுங்காவல் தண்டனையும் ருபாய் 4000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறை மூலம் போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment