கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தில் வசித்து வரும் இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்து வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் வேண்டுகோளுக்கு இனங்க தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கடலூர் மாவட்ட தலைவர் குமார் பரிந்துரையின் பேரில் சென்னை புரசை உதவும் கைகள் சார்பாகவும் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மெஷின் பொருத்தப்பட்ட புது தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புரசை உதவும் கைகள் நிறுவனர் வெங்கடேசன் மற்றும் விஜயன் பாலசுப்பிரமணியன் கோவிந்தராஜ் பாக்கியலட்சுமி பாரதிதாசன் பிரின்ஸ் அறக்கட்டளை மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தையல் மிஷினை லாரி டிரைவர் பட்டுக்கோட்டை மாணிக்கம் வாங்குவதற்கு பெரிதும் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க ஒருங்கிணைப்பாளர் அருண் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment