கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்கில் ஈடுப்பட்டு ஜாமினில் வெளிவந்த 459 தலைமறைவு குற்றவாளிகள் அதிரடியாக கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்கில் ஈடுப்பட்டு ஜாமினில் வெளிவந்த 459 தலைமறைவு குற்றவாளிகள் அதிரடியாக கைது

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்கில் ஈடுப்பட்டு ஜாமினில் வெளிவந்த 459 தலைமறைவு குற்றவாளிகள் அதிரடியாக கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அதிரடி


கடலூர் மாவட்டம் நீதிமன்றங்களில் விசாரணை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் தலைமறைவு குற்றவாளிகளை (NBW Accused) பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. சக்திகணேசன் உத்தரவின்பேரில் கடந்த 6 மாதம் காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 459 தலைமறைவு குற்றவாளிகள் (NBW Accused) பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.


கடலூர் மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றம் மூலம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் பிறப்பித்த தீர்ப்புகளில் ஜீவனாம்சம் கொடுக்காமல் இருக்கும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபேரில் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் நடவடிக்கையால் இதுவரை 30 நபர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் நீதிமன்றம் மூலம் தொடர்ந்து ஜீவனாம்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடலூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

*/