கடலூர் ஒன்றியம் ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி குட்டியாங்குப்பம், கடலூர் ஒன்றியம்,கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட்டம்,பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் கர்ம வீரர் காமராசர் அவர்களின் பிரமாண்ட ஓவியம் பள்ளி மைதானத்தில் மாணவச் செல்வங்கள் அருமையாய் உருவாக்கப்பட்டு இப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்கள் . வினாடி வினா,பாட்டு போட்டி நடைபெற்றது.
பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா பரிசு வழங்கினார், வினாடி வினா நிகழ்ச்சியை கணித ஆசிரியர் ரோஜா மற்றும் அறிவியல் ஆசிரியர் கிளமெண்ட், நடத்தினர் சமூக ஆர்வலரான இப்பள்ளியின் ஆசிரியர் செந்தில் குமார் விழாவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
ராஜலட்சுமி பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பற்றி அரிய விபரங்களை எடுத்து விளம்பினர் விழாவின் முடிவில் சர்க்கரை பொங்கலுடன் நிறைவு பெற்றது. அனைத்து மாணவச் செல்வங்களும் கர்மவீரர் காமராஜரின் புகைப்படம் வரைந்து வண்ணம் தீட்டி ஓவிய அஞ்சலி செலுத்தினர் ஆசிரியரையும் தலைமையாசிரியரை மாணவர்களையும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment