காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம், புவனகிரியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் புவனகிரி ஐயப்பன் கோவில் அருகாமையில் உள்ள காமராஜரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் சேர்மன் கோவி பழனிச்சாமி தலைமை தாங்கினார். செல்வராஜ் , ராஜாராமன், வடக்குத்திட்டை பாலசுப்பிரமணியமன், திருவாசகமூர்த்தி, பெருமாள், ராமதாஸ், பன்னீர்செல்வம் ,பாலமுருகன், சங்கர், ரவி ,கோகுலகிருஷ்ணன் ,ராஜசேகர், மதனகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . விழாவில் காமராஜர் திருவுருவை சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பு அழைப்பாளர் சௌந்தரபாண்டியன் கட்சி கொடி ஏற்றினார் .ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை மாநில பொதுச் செயலாளர் சேரன் வழங்கினார். மாவட்ட விவசாய பிரிவு கே.ஜி குமார் பெண்களுக்கு புடவை வழங்கினார். சண்முகம் அன்னதானம் வழங்கினார். நகர வர்த்தக பிரிவு தலைவர் சேதுராமன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழா ஏற்பட்டினை மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், புவனகிரி தொகுதி செய்தி தொடர்பாளர் பி.வி சம்பத் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் நாகய்யா, கொளஞ்சி, சிவப்பிரகாசம், மோகன், வைத்தியநாதன், செல்வம் ,முத்துவேல், முருகன் ,சையத்ஜாபர், நந்தகுமார், உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளரும் மணிவண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment