மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மகளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கோல போட்டிகளை கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.
ஆட்டோ களில் செஸ் ஒலிம்பிக் சின்னம் பொருத்திய ஸ்டிக்கர்களை ஒட்டி வாகன விளம்பரம் வண்டியினை அண்ணா விளையாட்டு அரங்கில் வந்தடைய செய்தார் கோலப்போட்டியில் 17 மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு அடங்கிய வண்ண கோலங்கள் இட்டனர் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாண்புமிகு கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா அவர்கள் வழங்கி போட்டியாளர்களை பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டை மாநகராட்சி மேயர் அவர்களும் நகர செயலாளர் அவர்களும் விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது


No comments:
Post a Comment