கடலூர் மாநகராட்சி 31-வது வார்டு பகுதியில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை மேயர் சுந்தரி ராஜா அடிக்கல் நாட்டினார்
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாநகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 31-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணாமலை நகரில் புதியதாக பூங்கா அமைக்கும் பணிக்காக 48 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடலூர் அண்ணாமலை நகரில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் , செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி , மாநகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா , அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் மருதவாணன் மாநகராட்சி உதவி பொறியாளர் மகாதேவன் , கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் சாய்துனிஷா சலீம் , ராஜலட்சுமி சங்கரதாஸ் ,விஜயலட்சுமி செந்தில், பிரசன்னா , த.சங்கீதா , சுதா அரங்கநாதன் , சுபாஷினி செந்தில்குமார் , ஹேமலதா , கடலூர் மாவட்டம் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி , கார்த்திக் , நகர பொருளாளர் சலீம் , துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி , இளைஞரணி செயலாளர் ஜெயசீலன் , உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடலூர் மாநகராட்சி 31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாய்துனிஷா சலீம் ஏற்பாடு செய்திருந்தார்.


No comments:
Post a Comment