நெய்வேலி ஏ.பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதி உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்த பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாெய்யாமாெழி அவர்களின் வழிகாட்டுதல்படி நெய்வேலி அடுத்த கெங்கைகாெண்டான் காலனி ஏ.பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதி உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்த பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது, தலைமையாசிரியர் திருமதி க.கராேலின்அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்கள்.
பள்ளி மேலாண்மை குழுவினை பற்றிய விழிப்புணர்வை தலைமையாசிரியர் அவர்கள் கூட்டத்தின் வாயிலாக மிக தெளிவாக எடுத்துரைத்தார்கள் அதனை தாெடர்ந்து பள்ளி மேலாண்மை குழு பாெறுப்பிற்கான தேர்தல் நடைபெற்று வாக்கெடுப்பின் மூலமாக பாெறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள். தலைவர் A.மணிமேகலை, துணை தலைவர் R.ராேஸி, செயலாளர் க.கராேலின், தலைமை ஆசிரியர் மற்றும் உறுப்பினர்கள் த.சாமிநாதன் சமூகசெயற்பாட்டாளர் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கபட்டனர்.
நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர் D.ஜவஹர் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அனைத்து ஆசிரியர்கள் கலந்து காெண்டனர், தேர்ந்தெடுக்கபட்ட பாெறுப்பாளர்களுக்கு உடனுக்கு உடன் சான்றிதழ்கள் வழங்கபட்டு அனைவரும் உறுதிமாெழி ஏற்றுக்காெண்டனர். அதனை தாெடர்ந்து தேசிய கீதம் பாடல் உடன் V.மேரிமேக்டலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

No comments:
Post a Comment