கடலூர் துறைமுகம் அருகே கடலில் மிதந்த இரண்டு மூட்டை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

கடலூர் துறைமுகம் அருகே கடலில் மிதந்த இரண்டு மூட்டை

கடலூர் துறைமுகம் அருகே தம்மனாம் பேட்டை கடற்கரை பகுதியில்  இரண்டு மூட்டைகள் மிதந்து கரை ஒதுங்கியது இதைப்பார்த்த  பொதுமக்கள்  உடனடியாக கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் கடலூர் முதுநகர் காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்மமான முறையில் மிதந்து வந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர்.
அப்போது இரண்டு மூட்டையிலும் கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதனை  தொடர்ந்து இரண்டு மூட்டைகளிலும் சுமார் 50 கிலோ கஞ்சா இருந்தது இதைகைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்  கஞ்சா மொட்டை கடலில் மிதந்து வந்ததால் கடலோர காவல் படையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment