கடலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு.
கடலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சாதிய ஆணவப் போக்கை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். செமஸ்டர் தேர்வுகளில் சாதி ஆணவத்தோடு கேட்கப்பட்ட கேள்வி ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் செயல். எனவே பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பட்டியல் அணியின் மாநில பொது செயலாளர் அரசு.ரங்கேஸ் தலைமையில் கடலூர் காவல் நிலையத்தில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் காரை.கண்ணன் மற்றும் நகர தலைவர் வேலு வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், கூட்டுறவு அனிமாநில செயலாளர் துரை. செந்தாமரைக்கண்ணன் ,சிறுபான்மை அணி மாநில செயலாளர் பிரவீன் குமார் ,மாவட்டத் துணைத் தலைவர் பத்மினி ,மாவட்ட செயலாளர்கள் பெருமாள், மூர்த்தி ,மாநகர கவுன்சிலர் சக்திவேல், ஓபிசி மாநில பொதுச்செயலாளர் குணா ,ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி ,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவநாதன் ,ஊடகப்பிரிவு மாவட்டத் துணைதலைவர் ராஜமச்சேந்திரசோழன் மாவட்ட செயலாளர் விஜய், மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment