L
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை விருத்தாசலம் வட்டாட்சியர் தலைமையில் அகற்றம்கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சர்வே எண் 117/3ல் முல்லா ஏரி இருந்ததாகவும், அந்த ஏரியிலிருந்து நீர் எடுத்து விவசாயம் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு இருந்த முல்லா ஏரியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது அந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று 2018ல் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதனை அமுல்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்ததால் மீண்டும் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment