திருமண வயது பூர்த்தியடையாத குழந்தை திருமணம் நடைபெற போவதாக வந்த 7 புகார்களுக்கு உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து காவல் அதிகாரிகள் நேரில் சென்று பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என எடுத்துகூறி திருமண வயது பூர்த்தியான பிறகு திருமணம் செய்ய வேண்டும் என தக்க அறிவுரை கூறி 7 குழந்தை திருமணமங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
குடும்பப் பிரச்சினை கணவன் மனைவி பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக 69 புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குடும்ப பிரச்சனைகள் கணவன் மனைவி பிரச்சனைகள் பக்கத்து வீட்டு பிரச்சினைகள், பொது பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பந்தமாக 113 புகார்களுக்கு CSR பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக வந்த 4 புகார் மீது விசாரணை மேற்க்கொண்டு ரூபாய் 2,44,750 பணம் புகார்தார்களுக்கு பெற்றுத்தரப்பட்டது. மேலும் கைமாற்றாக கொடுத்த 3.5 பவுன் நகை எதிர்மனுதாரிடம் பெற்று புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவி பிரச்சனைகள், மாமியார் மருமகள் பிரச்சினை,bபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் சம்பந்தமாக 467 புகார்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் இருதரப்பினரையும் விசாரணை மேற்கொண்டு இருதரப்பினரும் நல்உறவு ஏற்படுத்தப்பட்டு சமாதானமாக செல்வதாக கூறியதன்பேரில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

No comments:
Post a Comment