கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 July 2022

கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்

கடலூர் அருகே வரக்கால்பட்டில் கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.


கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் கடலூர் மாவட்ட பார்வையாளர் வி. ஏ .டி .கலிவரதன் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் வழிகாட்டுதலின்படி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வரக்கால்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு தலைமை  தலைமைதாங்கினார்  கடலூர் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ். முத்துக்குமரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மையக்குழு பொறுப்பாளர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் மிச்சர் பிள்ளை, மாவட்ட பொருளாளர் ஜெனித் ஆர். நாகநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர் .மாவட்ட துணை தலைவர் ஜே. பத்மினி ஜெயந்தி , பொருளாளர் ஜே. முருகதாஸ் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மீனவர் பிரிவு மாநில செயலாளர் எழிலரசி ஆறுமுகம் ,மாவட்ட செயலாளர் ஜே.டி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் .மாநில பொறுப்பாளர்கள் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளராகவும் துரை செந்தாமரை கண்ணன், எஸ். ஜெயச்சந்திரன், முரளி, வினோத் ராகவேந்திரன் ,திருமலை, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர். சந்திரமோகன் ,ராதாகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் தி. இராஜமச்சேந்திர சோழன், வெங்கடேசன், ஸ்டாலின், மாதவன், பார்த்திபன் ,ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மண்டல துணைத் தலைவர்கள் மண்டல செயலாளர்கள் மண்டல அணி தலைவர்கள் மண்டல பிரிவு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியும் மண்டலில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் அமைப்பு ரீதியான திட்டங்கள் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை ஏற்றம், வீட்டு சொத்து வரி உயர்வு போன்றவைகளை இந்த ஒன்றிய கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது 


திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளின் மிகவும் முக்கியமான குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய், எரிவாயு சம்பந்தமான கேஸ் சிலிண்டர் , டீசல் பெட்ரோல் போன்றவை  விலை குறைப்பு ஆகியவை செய்யாமல் மக்களை ஏமாற்றும் இந்த திமுக அரசை கண்டிக்கிறோம்.



 இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாடு முழுவதும் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் நல்வாழ்விற்கு வழங்கிய நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நன்றி தெரிவித்து பாராட்டுகிறோம்


நமது ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற சாலைகளை சீரமைத்து முழுமையாக அமைத்து தர வேண்டி தீர்மானம் ஏற்றுகிறோம்


தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கேடு அடைவதை  கண்டிக்கிறோம்


நமது ஒன்றியத்தில் அரசு அலுவலகத்தில் நமது பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் புகைப்படங்களை அமைத்தல்


நமது ஒன்றியத்தில் உட்பட்ட அனைத்து புத்க்களிலும் நமது கட்சியின் கோடியை ஏற்றுதல்


மாதம் ஒருமுறை நமது ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கி மக்களுக்கு அளித்தல்.


நமது ஒன்றியத்தில் உட்பட்ட அனைத்து கிராம புற மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஊக்குவித்தல்.

நமது ஒன்றியத்தில் உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளில் குடிநீர் வசதி செய்துதர மற்றும் சீரமைக்க வலியுறுத்தல் ஆகிய பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கடலூர் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://chat.whatsapp.com/CowAMrlAxv6G3B3RjJPqvL

No comments:

Post a Comment

*/